திடீரென காரை வழிமறித்து நடத்திய தாக்குதல் பயங்கரவாதிகள்.. முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு!

 
இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பெஹிபாக் பகுதியில் இன்று மதியம் முன்னாள் ராணுவ அதிகாரி மன்சூர் அகமது வாகாய், அவரது மனைவி மற்றும் உறவினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதலில் அவர்கள் மூவரும் பலத்த காயமடைந்தனர், அவர்கள் மீது ஒரு குண்டு பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மன்சூர் மருத்துவமனையில்  இறந்தார். சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web