மீண்டும் போர் பதற்றம்: கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லையில் நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எல்லையில் முதலில் கம்போடியா அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, தாய்லாந்து நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளின் எல்லையில் உள்ள தா முயென் தாம் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருவதால் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த சண்டையில் 48 பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 3 லட்சம் மக்கள் எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 5 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அந்தப் போர் முடிவுக்கு வந்தது.
எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாகவே கம்போடியா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் தாய்லாந்து தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்த மோதல் சம்பவத்தால் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
