தைப்பூச பெருவிழா... பிப்.11ம் தேதி வரை 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!

 
ரயில்

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 11ம் தேதி வரையில் 2 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 11-ம்தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரயிலும் (12653), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 12-ம்தேதி வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 12-ம்தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12638), மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12636) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

ரயில் நிறுத்தம்

ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 10-ம்தேதி வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரயிலும் (20684), ஜனவரி 2-ம்தேதி முதல் பிப்ரவரி 9-ம்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682), ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும் (20692)

ரயில்

ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 11-ம்தேதி வரை காரைக்காலில் இருந்து வரும் தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்” என்று கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web