அண்ணா, பெரியார், எம்ஜிஆர் வரிசையில் தளபதி... ஊரெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்!

 
பிரபு

 தமிழகத்தில் இளையதளபதி நடிகர் விஜய் தவெக என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது ‘ கோட்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படம் விஜய் கடைசி படமாக அமைகிறது. இதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனக் கூறியுள்ளார். அந்த வகையில் தவெகவின் முதல் மாநில  மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது.

தவெக

இந்த மாநாட்டிற்காக முன்னேற்பாடுகளுடன்  விக்கிரவாண்டியில் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்கு விஜய் ஒருங்கிணைப்பு குழுவை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நியமித்துள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய கொள்கைகளை முதல் மாநாட்டில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் பெரியார் திடலுக்கு சென்ற நேரில் மரியாதை செலுத்தியதால் அவர் என்ன மாதிரியான கொள்கைகளை கடைபிடிக்க போகிறார் எனவும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் மற்றும் பண்டிகைக்கெல்லாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார்.   பெரியார் மற்றும் அண்ணா போன்றவற்றின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில்  விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில் என்று எழுதப்பட்டுள்ளது‌. அதேபோன்று மற்றொரு போஸ்டரில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர் மற்றும் விஜய்யின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.  இவர்கள் வரிசையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய் என்பது போல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web