தவெக 2ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

 
விஜய் தவெக மாநாடு
 


 

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை புறநகர் - சரவணன், தென் சென்னை தெற்கு - தாமு, புதுக்கோட்டை - பர்வேஸ், நாகை- சுகுமார், தருமபுரி மேற்கு- சிவா, கள்ளக்குறிச்சி மேற்கு- பிரகாஷ், கன்னியாகுமரி மத்திய மாவட்டம்- கிருஷ்ணகுமார், அம்பத்தூர்- பாலமுருகன், மதுரை மேற்கு- தங்கபாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து  தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் , “தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.  புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சியின் தலைவர் விஜய் ” நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு, நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும்.

தவெக

நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது.  அனைவரும் சேர்ந்து பயணிப்போம்,நிச்சயம் 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதைவிட, இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web