மாரத்தான் போட்டியில் தவெக நிர்வாகி போதையில் கார் ஓட்டி விபத்து... !

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டி திருமயம் கடைவீதி, பொன்னமராவதி விளக்கு பகுதியில் வந்த போது அவ்வழியாக தவெக கட்சி கொடியுடன் வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த குடிநீர் டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த மாரத்தான் போட்டி நடுவில் அதிவேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் சிக்காமல் இருக்க அனைவரும் அலறியடித்து நாலாபுறமும் ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த காரை சுற்றிவளைத்து, அதிலிருந்த 3 பேரையும் இறக்கிய போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவர் உட்பட 3 பேர் மீதும் சராமாரி தாக்குதல் நடத்தினர். போலீசார், 3 பேரையும் மீட்டு திருமயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் காரை தாறுமாறாக ஓட்டி வந்தது சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய தவெக நிர்வாகி மணி என்பதும், உடன் வந்த 2 பேரும் நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மணிக்கு ரூ.10000 அபராதம் விதித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!