பரபரப்பு! தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

 
புஸ்ஸி ஆனந்த்

 

தவெக கட்சி தலைவர் விஜய்க்கு பக்க பலமாக இருந்து கட்சிப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டவர்  புஸ்ஸி ஆனந்த். இவர் இன்று விஜய்யுடன்   ஆளுநர் ரவியை  சந்திக்க சென்றார். தற்போது  தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு  தவெக கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

புஸ்ஸி ஆனந்த்

அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா்.  
இந்த நிலையில் சென்னை தி நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை வினியோகம் செய்தனா்.  இதற்கு முன் அனுமதி எதுவும் பெறவில்லை என   கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா்.

புஸ்ஸி ஆனந்த்

அப்போது அவர்களை காண தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். அந்த வரிசையில்  புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் சிறை பிடித்து வைத்தனா். இதனால் மண்டப வளாகத்தில் சேர் ஒன்றில் அமைதியாக புஸ்ஸி ஆனந்த் அமர்ந்திருந்தார். அவரது கைதுக்கு தவெக தொண்டர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web