தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
இன்று டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) December 25, 2024
உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியும், புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!