தவாக நிர்வாகி துடிக்க துடிக்க படுகொலை.. வீட்டு பொருட்களையும் எரித்து நாசம்.. அதிர்ச்சி பின்னணி!
கடலூர் முதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது வீடு மற்றும் பைக்குகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் சன்னூர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி. இந்நிலையில் நேற்று இரவு சங்கர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சதீஷ் உள்பட 2 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதை பார்த்த சங்கர் அங்கிருந்து தப்ப முயன்றார்.
அதற்குள் சங்கரை துரத்திச் சென்று கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர், சதீஷ் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சதீஷ் மற்றும் அவருடன் வந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலைச் சம்பவத்துக்குப் பிறகு, நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சதீஷ் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!