உபதேசம் எல்லாம் ஊருக்கு தான்... ஹிஜாப் அணியால் கிளாமர் ஆடையில் ஈரான் பாதுகாப்பு அதிகாரியின் மகள் திருமண வீடியோ!

 
ஈரான் ஹிஜாப் பாதுகாப்பு அதிகாரி

கடுமையான இஸ்லாமிய உடைநெறிகள் கடைப்பிடிக்கப்படும் ஈரானில், பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரியின் மகள் மேற்கத்திய பாணியிலான ஆடையில் ஹிஜாப் இல்லாமல் தோன்றிய திருமண வீடியோ ஒன்று வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டப்படி 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், 2022-ஆம் ஆண்டு ஹிஜாப் முறையாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் போலீசார் மாஷா அமினி (22) என்பவரை தாக்கிய சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த போராட்டத்தில் பல இளம் பெண்கள் உயிரிழந்ததும் சர்வதேச கவனம் ஈர்த்தது.


இந்நிலையில், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை முன்னிலைப்படுத்திய அலி ஷாம்கனியின் மகள் பாத்திமாவின் திருமணத்தில் எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெஹ்ரானில் உள்ள ஆடம்பரமான ‘எஸ்பினாஸ் பேலஸ்’ ஓட்டலில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், மணமகளும் அவரின் தாயாரும் ஹிஜாப் அணியாமல், தோள்கள் மற்றும் முதுகுப் பகுதிகள் வெளிப்படும் கவுன் அணிந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

திருமண அரங்கில் பல பெண்களும் இதேபோன்ற மேற்கத்திய பாணியிலான ஆடையில் இருப்பது காட்சியாகத் தெரிகிறது. இது, பொதுமக்கள் மீது கடுமையான ஹிஜாப் விதிகளைப் பின்பற்றச் சொல்லும் ஆட்சியினரின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஈரானை விட்டு வெளியேறிய பெண்கள் உரிமை ஆர்வலர்கள், “மக்களின் தலைமுடி தெரிந்ததற்காக பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; ஆனால் அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆடம்பரமான அரண்மனையில் விதிமுறைகளை மீறுகிறார்கள்” என கடுமையாக சாடியுள்ளனர்.

சர்ச்சை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இந்த வீடியோவை இஸ்ரேல் உளவு அமைப்புகள் கசிந்தவை என அலி ஷாம்கனி கூறி, “தனியுரிமை மீறல்” என குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரானில் ஹிஜாப் சட்டங்கள் மீதான போராட்டங்கள் தொடரும் நிலையில், இந்த வீடியோ அதிகாரர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள் கொண்டு வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?