அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி... டிரம்ப் பதவியேற்கும் போதும் இப்படித்தானாம்... ஏன் தெரியுமா?!

இன்று அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவை உலகமே கொண்டாடி வரும் போது, டிரம்ப் பதவியேற்கும் போதும் கூட அந்நாட்டின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்துக் கொண்டிருக்கும். இது குறித்து பதவி ஏற்ற பின்னர் வேண்டுமானால் டிரம்ப் உத்தரவை மாற்றியமைக்கலாம்.
முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது வயதில் காலமான நிலையில், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்கும் வரை டொனால்ட் டிரம்ப் இது குறித்து எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்பதால், டிரம்ப் பதவியேற்கும் போதும் கூட அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் தான் பறந்து கொண்டிருக்கும். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் நடவடிக்கையில் டிரம்பால் எதையும் செய்ய இயலாது.
வழக்கமாக அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ மரணமடையும் போது அரசு அலுவலகக் கட்டடங்கள், வளாகங்கள், அமெரிக்க தூதரகங்கள், பாதுகாப்புப் படை அலுவலகங்களில் தேசியக் கொடி 30 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தான் பறக்க விடப்படும். அதன் படி தான் தற்போது வரை அமெரிக்காவில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. ஜனவரி 28ம் தேதி வரை அப்படியே தான் அரைக்கம்பத்தில் அமெரிக்க தேசிய கொடி பறக்கும்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜனவரி 20ம் தேதியும் அதன் பின்னர் டிரம்பின் ஆட்சித் தொடங்கிய முதல் வாரம் முழுவதும் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் தான் பறந்துக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக தேசியக் கொடி பறப்பது தொடர்பான உத்தரவுகளை அமெரிக்க அதிபர், ஆளுநர், மாகாண மேயர்கள் பிறப்பிக்கலாம். ஒருவேளை, டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவதை மாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக அவரால் இதை மாற்ற முடியாது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!