10 நாட்கள் மரத்தில் தம்பதிகளை லாக் செய்த கரடி!

 
10 நாட்கள் மரத்தில் தம்பதிகளை லாக் செய்த கரடி!


ரஷ்யாவில் அன்டன் மற்றும் நீனா தம்பதிகள் இருவரும் காட்டுப்பகுதியில் சாகச பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக திடீரென புதை மணலில் சிக்கியது. இதனால் இருவரும் காருக்குள்ளேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

10 நாட்கள் மரத்தில் தம்பதிகளை லாக் செய்த கரடி!


இரவு நேரமானதால் காலையில் பயணத்தை தொடங்கலாம் என முடிவு செய்தனர்.அதன் படி மறுநாள் காலை தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பேஸ் கேம்ப் நோக்கி நடக்கத் தொடங்கினர். முன்னதாக தங்கள் காரில் பேஸ்கேம் செல்கிறோம், இரண்டு நபர்கள் என எழுதி ஒட்டி வைத்துவிட்டனர்.இந்நிலையில் அவர்கள் நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் கரடி ஒன்று துரத்தியது. அவர்கள் கரடியை விரட்ட முயன்றனர்.

ஆனால் கரடிய பயப்படவில்லை. எனவே இருவரும் ஒரு பெரிய மரத்தில் ஏறினர்.
அவர்கள் மரத்தில் ஏறியதும் அந்த கரடி கீழேயே நின்றது. கரடியை விரட்ட எவ்வளவோ முயற்சி செய்தனர். அதுவும் பலன் அளிக்கவில்லை.அதனால் அவர்கள் 10 நாட்கள் மரத்திலேயே தங்கினர். அதன் பின்னர் அந்த வழியாக வந்தவர் காரை பார்த்துவிட்டு அங்கு வந்த கரடியை விரட்டிவிட்டு இருவரையும் மீட்டுள்ளார்.

From around the web