கல்யாணமாகி 15 நாள் தான்... திருப்பதி படியேறிய போது புதுமாப்பிள்ளை மயங்கி சரிந்து மரணம்!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேசரம் கிராமத்தில் வசித்து வருபவர் நரேஷ். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நரேஷுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஸ்வாதி என்ற பெண்ணை நரேஷ் மணம் முடித்துள்ளார். புதுமண தம்பதிகள் விருந்தினர் இல்லங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
பின்னர் நேர்த்திக்கடனாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றிருந்தார். அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2,350 வது படிக்கு வந்து போது திடீரென அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் நரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பதி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!