தம்பியை கொன்ற அண்ணன்.. வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி!
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் தாளக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயன் மகன் முத்தையன் (30). இவர் தனது தாய் மாரியாயி (50), தம்பி கோபி (27) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். முத்தையன் காசநோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கோபி மற்றும் அவரது தாய் மாரியா இருவரும் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர். வேலைக்கு செல்லாத முத்தையனை கோபி அடிக்கடி திட்டியுள்ளார். முத்தையனை வேலைக்கு செல்லும்படி அவரது தாய் மாரியாயும் அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி மாரியாயி துணி துவைக்க சென்றபோது, வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி கோபியை அண்ணன் முத்தையன் கடப்பா கல்லால் அடித்து கொன்றார். மாரியாய் திரும்பி வந்து, கோபி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாரியாயி அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிந்து முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வாதங்கள் முடிந்து நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு வழங்கினார். காசநோயால் பாதிக்கப்பட்ட முத்தையன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட முத்தயன் நேரில் ஆஜராக முடியாததால், புதிய பிஎன்எஸ்எஸ் சட்டத்தின்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பில் முத்தையனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், தாயை மிரட்டியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ.பாலசுப்ரமணியன் ஆஜரானார். புதிய PNSS சட்டத்தின்படி, திருச்சி மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!