அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது... டெல்லி சட்டசபைத் தேர்தலில் மாஸ் காட்டப்போவது யார்?!

 
அரவிந்த் கெஜ்ரிவால்
இன்று மாலை 6 மணியுடன் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில், நாளை மறுநாள் பிப்ரவரி 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் மாஸ் காட்டப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பாஜக தலைவர்களும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் என கட்சிகள் டெல்லியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3வது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து சிக்கி சிறை சென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2024 செப்டம்பர் 21-ம் தேதி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியில் அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் பேசி தீவிர பிரச்சாரத்தை இம்முறை மேற்கொண்டார். அமெரிக்க மாடல் அரசியல் டெல்லியில் கைக்கொடுக்குமா? என்பது தெரியவில்லை.

டெல்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சி கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதே சமயம் தே.ஜ. கூட்டணியில் 2 இடங்களை மட்டும்
கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. அங்கு பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வசிப்பதால், தே.ஜ.கூட்டணியில் உள்ள பிரபல தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் களம் இறக்கப்பட்டனர். 70 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு

“பிப்ரவரி 8ம் தேதி பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைக்கும். பாஜக அரசு அமைந்ததும், வாக்குறுதிகளை நிறைவேற்றும். மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்துக்குள், டெல்லியில் உள்ள பெண்கள் ரூ.2,500 உதவித் தொகை பெறத் தொடங்குவார்கள்.

பெண்கள் எனக்கு கவசமாக பணியாற்றி மிகப் பெரிய பங்களிப்பை அளித்ததால் தான், எனது அரசு மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அதேபோல, டெல்லியிலும் பெண்கள் ஆதரவுடன் பாஜக வெற்றி பெறும். டெல்லி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள இரட்டை இன்ஜின் அரசு தேர்ந்தெடுக்கப்படும்” என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்தார். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web