நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்... புதுமாப்பிள்ளை உடல்கருகி பலியான சோகம்!

 
தீப்பிடித்த கார்

அடுத்த மாதம் 14ம் தேதி திருமணமாக இருந்த நிலையில், கல்யாண பத்திரிக்கை விநியோகிக்க சென்றுக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல்கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-மீரட் விரைவுச் சாலையில் காஜிபூர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தவர், கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

டெல்லியைச் சேர்ந்த அனில் என்பவருக்கு வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை விநியோகிக்கச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 

அனில் சென்றுக் கொண்டிருந்த வேகன் ஆர் கார் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

திருமண பத்திரிக்கைகளை விநியோகிக்க மதியம் சென்ற அனில் மாலையாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். அதன் பின்னர் செல்போனில் அவரை அழைக்க முயற்சித்த போது அவரது செல்போன் சுவிட் ஆஃப் ஆகியிருந்தது. இரவு 11.30 மணியளவில் தீ விபத்து குறித்து போலீசார் தெரிவித்ததாக குடும்பத்தினர் கூறினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web