மாரத்தான் போட்டியில் திடீரென புகுந்த தவெக கொடி கட்டிய கார்.. போதையில் தள்ளாடிய மூன்று பேருக்கு தர்ம அடி!

 
 தவெக நிர்வாகிகள்

புதுக்கோட்டை அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்ற பகுதியில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இன்று காலை போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

மலைக்கோட்டை பகுதி அருகே தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய மாரத்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​தமிழக வெற்றிக் கழக கொடியுடன் கூடிய கார் இருசக்கர வாகனங்கள் மற்றும் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. மாரத்தானில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதே நேரத்தில், குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழக  நிர்வாகிகள் மூவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிகிறது. தவெக நிர்வாகிகள் திருமயம் காவல் நிலையத்தில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web