நீர்யானை தாக்கி பராமரிப்பாளர் பலி.... பெரும் சோகம்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, முதலை, நீர் யானை உள்பட பல்வேறு விலங்குகளும், பல்வேறு வகை பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் சந்தோஷ் குமார் மஹ்டோ (54) என்பவர் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பூங்காவில் உள்ள நீர்யானை சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த குட்டியை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல சந்தோஷ் குமார் முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த இருந்த நீர் யானை சந்தோஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளது.இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்தோஷ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கேட்டபோது, “சந்தோஷ் குமார் மஹ்டோ பணியில் இருந்தப்போது இறந்ததால் ரூ. 20 லட்சம் கருணைத் தொகை வழங்க மாநில அரசுக்கு மிருகக்காட்சிசாலை ஆணையம் முன்மொழிவு அனுப்பும் என்று கூறினார்.மேலும், காட்டு விலங்குகள் தாக்குதலால் இறந்தவர்களுக்கு விதிமுறைப்படி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவமனை செலவை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் கவனித்துக்கொண்டது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கவும் முயற்சிப்போம்” என்று ஜப்பார் சிங் கூறினார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!