உஷார்... பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறி இளைஞர் பலி!

 
செல்போன்

 
 
இன்றைய அவசர யுகத்தில் மொபைல் இல்லாத கைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவுக்கு அதன் தேவை அவசியமாகிவிட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினியின்  பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் ரஜினி நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரைப் பறித்த செல்போன் கேம்! அம்மா திட்டியதால் மகன் தற்கொலை!

அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு இளைஞர் இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உலகம் முழுவதும் சமீப காலமாகவே செல்போன் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சற்று கவனமாக இருக்க சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  செல்போன் பேட்டரி பழுதாகி வீங்கிய நிலையில் இருந்தால் செல்போன் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆம்புலன்ஸ்

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் போது சூடாகி வெடித்து விடும் அபாயம் ஏற்படலாம். சார்ஜ் செய்தபடி செல்போனை பயன்படுத்துவதாலும்  செயல் திறன் பிரச்சனையால் சூடாகி வெடிக்கலாம். அதே போல் செல்போன் நிறுவனம் அறிவுறுத்தியதை விட அதிக வாட்ஸ் கொண்ட சார்ஜரை பயன்படுத்த வேண்டாம். செல்போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web