செம... ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
இந்தியாவில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு இன்று ஆகஸ்ட் 24ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இத்திட்டம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் இவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஓய்வூதியம் வழங்குவதையும், பயனாளிகளுக்கு நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
VIDEO | "One of the biggest decisions (taken by Union Cabinet today) is about BioE3. Like there was industrial revolution and IT revolution, a bio revolution will soon take place. Fields related to bio-technology and bio-science will help in generating a lot of job opportunities.… pic.twitter.com/3AjOFbtOBZ
— Press Trust of India (@PTI_News) August 24, 2024
ஏப்ரல் 1, 2025 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) மேற்பார்வையில் 'விக்யான் தாரா' எனப்படும் ஒருங்கிணைந்த மத்தியத் துறை முன்முயற்சியுடன் இப்போது ஒருங்கிணைக்கப்பட்ட 3 திட்டங்களைத் தொடரவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான 15வது நிதிக் கமிஷன் காலத்திற்கான 'விக்யான் தாரா' திட்டத்திற்கான உத்தேச செலவு ரூ.10,579.84 கோடி ஆகும்.
கூடுதலாக, பயோடெக்னாலஜி துறையின் 'பயோ இ3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) கொள்கை'க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது பல்வேறு கருப்பொருள் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான புதுமை சார்ந்த ஆதரவின் மூலம் உயர்-செயல்திறன் உயிரி உற்பத்தியை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!