கடத்தல்காரரை விட்டு செல்ல மனமில்லாமல் அழுத குழந்தை.. பரிதவித்த தாய்.. வைரலாகும் வீடியோ!

 
பிருத்வி

ஜெய்ப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக தனது உறவினரின் குழந்தையை போலீஸ் கான்ஸ்டபிள் கடத்திச் சென்றார். 14 மாதங்களாக தன்னுடன் வளர்ந்த 2 வயது குழந்தை மீண்டும் தாயிடம் கொண்டு வரப்பட்டது.ஆனால் 2 வயது குழந்தை தாயிடம் செல்ல மறுத்து கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுதது.



உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், குடும்பத் தகராறு காரணமாக ஜூன் 14, 2023 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் 11 மாத குழந்தை பிருத்வியைக் கடத்திச் சென்றார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஜாவை தேடி வந்தனர். ஆனால் தனுஜ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனது தோற்றத்தை மாற்றி, உ.பி., மாநிலம் மதுராவில் யமுனை நதிக்கரையில் உள்ள குடிசையில் வாழ்ந்து வருகிறார். அவர்  பிருத்வியை தனது மகனாக மற்றவர்களிடம்  காட்டி வந்துள்ளார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு, அவர் இருக்கும் இடம் தெரிய வந்த போலீஸார், தனுஜாவைக் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை தாயிடம் ஒப்படைத்தபோது, ​​பிருத்வி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதைப் பார்த்து குற்றம் சாட்டப்பட்ட தனுஜும் கதறி அழுததால், போலீசார் ஆச்சரியமடைந்தனர். பின்னர், அவர்கள் தங்கள் பாசப்போராட்டத்தை  கைவிட்டு, தனுஜாவை கைது செய்து, பிருத்வியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web