நூலிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்... அங்கன்வாடி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

 
 நூலிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்... அங்கன்வாடி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அங்கன்வாடி மைய மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் வருவதற்கு சற்று முன்பே மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் விபத்தில் இருந்து தப்பினர்.

 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மாநாடு தண்டுபத்து ஊராட்சி அத்தியடிதட்டில் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்காக பணியாளர்கள் வந்தனர். அங்கன்வாடியை மையத்தின் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்றனர்.

தூத்துக்குடி

தொடர்ந்து, குழந்தைகள் அமரும் சேர்கள், விளையாட்டு சாதனங்களை பணியாளர்கள் ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று மையத்தின் மேற்கூரை காங்கிரீட் பூச்சு உடைந்து குழந்தைகளின் சேர்கள், விளையாட்டு சாதனங்கள் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்து உடனடியாக தப்பி வெளியே ஓடி வந்ததால் காயமின்றி தப்பினர்.

 

அப்போது குழந்தைகள் யாரும் மையத்துக்கு வராததால்  அவர்களும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினர். உடனடியாக பெயர்ந்து விழுந்த காங்கிரீட் பூச்சுகளை அகற்றி விட்டு, மையத்தின் மாற்று இடங்களில் குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது. பின்னர் குழந்தைகள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

போலீஸ்

இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில அரசு அதிகாரிகள் அதிகளவில் பணம் கையூட்டு வாங்கிக் கொண்டு கட்டிடங்கள் தரமாக கட்டுப்படுவதை உறுதி செய்வதில்லை. தூத்துக்குடி மட்டுமல்லாமல் பல இடங்களிலும் இப்படி புதிதாக கட்டப்படுகிற கட்டிடங்கள் தரமில்லாமல் இடிந்து விழுவது, சேதமடைவது கவலையளிப்பதாகவும்  அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web