மோதல் விவகாரம்.. பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
இருதரப்பு மோதலில் தேடப்பட்டு வந்த பாடகர் மனோவின் இரண்டு மகன்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 10ம் தேதி வளசரவாக்கம் ஸ்ரீதேவி நகரில் உணவு வாங்க வந்த இருவரை பாடகர் மனோவின் இரு மகன்கள் ஜாகீர், ரபீக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பின், வளசரவாக்கம் போலீசார், ரபீக், ஜாகீர் மனோ வீட்டில் வேலை பார்த்த , தர்ம விக்னேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தர்மா விக்னேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் ரபீக் ஜாகிரை தேடி வந்தனர்.இதனிடையே, தனது மகன்களை 10க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, இரு மகன்களையும் 10க்கும் மேற்பட்டோர் தாக்கிய காட்சிகளை சமர்பித்தார்.
இதையடுத்து மனோவின் மகன்களை தாக்கிய 8 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பாடகர் மனோவின் இரண்டு மகன்களும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த தர்மா, விக்னேஷ் ஆகிய இருவருக்கும் பூவிந்தவல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!