நாடே எதிர்பார்ப்பு... இன்று தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ் போட்டிகள்... ஹாட்ரிக் பதக்கம் வெல்வாரா மாரியப்பன்!
கடந்த இரண்டு பாராலிம்பிக்ஸ் போட்டிகளிலும் பதக்கம் வென்ற தமிழர் மாரியப்பன் இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் அடிப்பாரா என்று ஆர்வமுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று ஆகஸ்ட் 28ம் தேதி பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்குகிறது. இன்று தொடங்கும் இந்த பாராலிம்பிக் ஒலிம்பிக் தொடர் வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 170 நாடுகள் இந்த பாராலிம்பிக் தொடரில் கலந்து கொள்கின்றன. நடப்பாண்டு போட்டிகளில் இந்தியா தரப்பில் 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 2020 ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் பங்கேற்று மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இந்த முறை இந்தியா 84 வீரர், வீராங்கனைகளுடன் 12 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கிறது. தடகளத்தில் மட்டும் 38 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதில், வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ. பாரா கயாக்கிங், பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல். டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ போன்ற விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் 5 தங்கப் பதக்கம், 8 வெள்ளிப் பதக்கம் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்கள் வென்று 24-வது இடத்தைப் பிடித்தது.
இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி புது சாதனைகள் படைப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக 10 வீரர்/ வீராங்கனைகள் கண்டிப்பாக பதக்கம் வெல்வார்கள் என ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கையில் இருந்து வருகிறது.
மேலும் பல வீரர்/வீராங்கனைகள் இந்த முறை புதிதாக பதக்கப் பட்டியலில் இடம் பெறலாம் எனவும் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த பாராலிம்பிக்ஸை போட்டியை விடக் கூடுதலாக இந்தியாவுக்குப் பதக்கங்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
10 பதக்க வீரர்/வீராங்கனைகள்
சுமித் ஆன்டில் – (தடகளம் – ஈட்டி எறிதல்)
அவனி லேகாரா – (துப்பாக்கி சுடுதல் – 10/50 மீ ஏர் பிஸ்டல்)
மாரியப்பன் தங்கவேலு – (தடகளம் – உயரம் தாண்டுதல்)
நிஷாத் குமார் – (தடகளம் – உயரம் தாண்டுதல்)
யோகேஷ் கதுனியா – (தடகளம் – வட்டு எறிதல்)
பவினா படேல் – (டேபிள் டென்னிஸ்)
சுஹாஸ் லலினகெரே யதிராஜ் – (பாரபேட்மிண்டன்)
சிம்ரன் சர்மா – (துப்பாக்கி சுடுதல்)
ஷீத்தல் தேவி – (வில்வித்தை)
ருத்ரன்ஷ் கண்டேல்வால் – (துப்பாக்கி சுடுதல் – 50மீ. ஏர் பிஸ்டல்)
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா