அந்தரத்தில் நின்ற கிரேன்... ஆத்திரத்தில் உதவியாளரை அறைந்த எம்.பி., வைரலாகும் வீடியோ!

 
பாஜக கிரேன்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் *தேசிய ஒற்றுமை தினம்* சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது மத்தியப் பிரதேசத்தின் சத்னாவில் நடந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்னாவில் நடைபெற்ற “ஒற்றுமைக்கான ஓட்டம்” (Run for Unity) நிகழ்ச்சியில் எம்.பி. கணேஷ் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேன் மூலம் மேலே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், கிரேன் சில அடிகள் உயர்ந்தவுடன் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் கிரேன் நடுவழியிலேயே நின்று செயலிழந்தது. இதைக் கண்டு எம்.பி. கணேஷ் சிங் கடும் ஆத்திரமடைந்தார். அப்போது அவரை உதவ முயன்ற கிரேன் ஆப்பரேட்டரை, கேபினுக்குள் இருந்தபடியே தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

கிரேன்

சம்பவம் வெளிவந்ததையடுத்து, எம்.பியின் நடத்தை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், நிகழ்ச்சியில் இருந்த சிலர் “கிரேனில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது; அதை சரி செய்ய முயன்றபோது ஏற்பட்ட குழப்பம் தான் இது” என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?