முதியவரை இழுத்து சென்ற முதலை... கதறி அழும் உறவினர்கள்!!

 
முதலை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது.இந்த   ஆற்றில் சுந்தரமூர்த்தி  அவருக்குச் சொந்தமான கால்நடைகளை குளிப்பாட்ட சென்றிருந்தார். இந்நிலையில் சுமார் 1 மணிக்கு  ஆற்றில்  கால்நடைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, பின்பக்கமாக வந்த முதலை ஒன்று அவரை தோள்பட்டையில் கடித்து இழுத்துச் சென்றுவிட்டது.  


அருகில் இருந்த பெண் ஒருவர் அலறல் சத்தத்தைக் கேட்டு கிராம மக்களை அழைத்து வந்துள்ளார். உடனே கிராம மக்கள் குமராட்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 4 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.

நெல்லை: காரையார் அணையில் முதலை நடமாட்டம்! வைரலாகும் வீடியோ!


 இந்த உடலை 4 மணி நேரத்துக்கும் மேலாக வைத்திருந்தும் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   இந்த சம்பவம் குறித்து  தாசில்தாரும் இதுவரை வந்து எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web