கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றிய கொடூரம்.. வங்கி ஊழியரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கார் விபத்தில் தனது கணவரை இழந்தார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் காரணமாக, அந்தப் பெண் வேலையில் சேர திருப்பத்தூரிலிருந்து மறைமலைநகருக்கு வந்தார்.
வேலையில் சேர்ந்த பிறகு, அந்தப் பெண் அதே வங்கியில் பணிபுரிந்து வந்த அரக்கோணத்தைச் சேர்ந்த தன்ராஜுடன், தங்கையைப் போல பழகினார். பின்னர், ஒரு வருடம் கழித்து, அந்தப் பெண்ணை காதலிப்பதாக தன்ராஜ் கூறினார். இதன் காரணமாக, அந்தப் பெண் தன்ராஜுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், தன்ராஜ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி தொடர்ந்து பழகி வந்தார். இருவரும் தனிப்பட்ட முறையில் கூட சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜூலை 2022 இல், அந்தப் பெண்ணுக்கு வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு இடமாற்றம் கிடைத்தது. அங்கு சென்ற பிறகும், தன்ராஜ் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில், ஜூன் 2024 இல், கோயம்பேடு பகுதியில் வேறொரு பெண்ணுடன் தன்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்ததும், அந்தப் பெண் அங்கு சென்று தன்ராஜின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தன்ராஜின் குடும்பத்தினர் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், தன்ராஜின் சகோதரர் யுவராஜ் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டு, தன்ராஜை திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். அப்போது, அந்தப் பெண் தன்ராஜுக்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் யுவராஜ், தன்ராஜை வாணியம்பாடிக்கு அழைத்து வந்து, அந்தப் பெண்ணையும், தன்ராஜையும் ஏலகிரி மலை அடிவாரத்தில் தனியாக இருக்கச் சொன்னார். அங்கிருந்து, ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, தன்ராஜும் அவரது சகோதரரும் அரக்கோணம் திரும்பிச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, தன்ராஜும் அவரது குடும்பத்தினரும் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வாணியம்பாடியை அடுத்த புதுக்கோவில் பகுதிக்கு வந்தனர். அப்போது, அம்பலூர் போலீசாரின் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து நடத்தினர். பின்னர் அவர்கள், "நீங்க வேற சமூகத்தவங்க, நாங்க வேற சமூகத்தவங்க. தன்ராஜுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. அவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தருவோம். அது சரியா நடக்கலன்னா, அந்தப் பெண்ணையும், அவங்க குடும்பத்தையும் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டியிருக்காரு" என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த மாதம் தன்ராஜுக்கும் திருமணம் நடக்கவுள்ளதால், திருமணத்தை நிறுத்திவிட்டு தன்ராஜை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் துறையினர் தன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் பணம் பறித்த யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!