மோசடிகளை அம்பலத்தியதால் நடந்த கொடூரம்.. பத்திரிக்கையாளர் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

 
முகேஷ் சந்திரகர்

சத்தீஸ்கரில் செய்தி சேனல் ஒன்றில் பணியாற்றிய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு எதிராக பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுரேஷ் சந்திரகரின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

கொலை

இதனிடையே நேற்று முன்தினம் (01-01-25) இரவு முதல் முகேஷ் காணாமல் போனார். சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரித்தேஷ் ஏற்பாடு செய்த சந்திப்பைத் தொடர்ந்து முகேஷின் தொலைபேசி அணைக்கப்பட்டதால் முகேஷின் சகோதரர் யுகேஷ் சந்திரகர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர்.

போலீஸ்

இந்நிலையில் இன்று (03-01-25) சட்டன்பாறை பகுதியில் உள்ள சுரேஷ் சந்திரகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் முகேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து முகேஷின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒப்பந்ததாரர் சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web