கள்ளக்காதல்... மந்திரவாதியுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த கொடூரம்!
தெலுங்கானா மாநில நாகர் கர்னூல் மாவட்டத்தில், மனைவியுடன் மந்திரவாதி கள்ள உறவு வைத்திருந்தது காரணமாக கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ராமுலு (35) பிளம்பர் வேலை செய்து வந்தார். அவரது மனைவி மானசா (35). தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வீட்டில் நகை திருட்டு நடந்ததை அடுத்து, ராமுலு மற்றும் மானசா இருவரும் பெத்த முதுநூரைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷை (27) அணுகினர். பூஜைகள் நடத்தியபோது மானசா மற்றும் சுரேஷ் இடையே கள்ளக்காதல் உருவாகி, இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்தனர்.

இதனை ராமுலு அறிந்து, மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் மானசா அந்த உறவை நிறுத்த மறுத்ததால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனை ஒழிக்க சுரேஷுடன் மானசா திட்டமிட்டார். கடந்த 8ம் தேதி தாய் வீட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மானசா, “நான் இப்போது வீட்டில் இல்லை; இப்போது கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது” என சுரேஷிடம் கூறியுள்ளார்.

அதன்படி சுரேஷ், தனது ஊழியர் பாலபீர் மற்றும் மைத்துனர் ஹனுமந்துவிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்து கொலை செய்ய ஏற்பாடு செய்தார். ராமுலுவை பெத்த முதுநூரு புறநகர் பகுதிக்கு வரவழைத்து, அதிகமாக மது குடிக்க வைத்தனர். மயக்கத்தில் இருந்த அவரின் வாய், மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சுத் திணற வைத்து கொலை செய்தனர். பின்னர் விபத்து போல தோன்றச் செய்வதற்காக உடலில் காயங்களை ஏற்படுத்தி சாலையோரம் வீசினர்.போலீசார் விசாரணையில் இது கொலை என்று உறுதி செய்யப்பட்டு, மந்திரவாதி சுரேஷ், மானசா, பாலபீர் மற்றும் ஹனுமந்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
