நன்கொடைக்காக பெண் செய்த கொடூரம்.. பெற்ற 1 வயது குழந்தைக்கு விஷம் வைத்த அவலம்.. அதிர்ச்சி பின்னணி!

 
ஆஸ்திரேலிய பெண், குழந்தை

சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நன்கொடைகளை ஈர்ப்பதற்காகவும் தனது ஒரு வயது மகளுக்கு விஷம் கொடுத்ததாக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுவதாக கூறி, சமூக ஊடகங்களில் பார்வைகளையும் நன்கொடைகளையும் பெறுவதற்காக, நோய்வாய்ப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு, ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த 34 வயது பெண், எந்த மருத்துவ அனுமதியும் இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஒரு மருந்தகத்தில் இருந்து மருந்துகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2024 முதல் அக்டோபர் 15, 2024 வரை அந்தப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனை குழந்தையின் நிலை குறித்து சந்தேகம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இளம் நடிகர் கைது

மாத்திரைகள் மற்றும் அவர் அளித்த சிறப்பு சிகிச்சை காரணமாக நோய்வாய்ப்பட்டு பரிதாபகரமான நிலையில் இருந்த குழந்தையின் வீடியோக்களை எடுத்து, கோலுண்ட்மீ என்ற நன்கொடை சேகரிப்பு தளத்தைப் பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை சேகரித்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web