தீண்டாமையின் உச்சக்கட்டம்.. 17 வயது பட்டியலினத்து சிறுவனை 6வயது சிறுவன் காலில் விழ வைத்த கொடூரம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம் பட்டி கிராமத்தில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் கடத்தி, அடித்து, அவனது செல்போனைப் பறித்து, அனைவரின் காலிலும் விழச் செய்து சித்திரவதை செய்தனர். ஆறு வயது சிறுவனனின் காலில் விழச் செய்தனர். 17 வயது சிறுவனைக் கொலை செய்வதாகவும் மிரட்டினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிஷோர், உக்ரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ் மற்றும் நிதிஸ் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உசிலம்பட்டி நகர காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் பேசுகையில், "சட்டப்படி அனைவரும் சமம் என்றாலும், அனைவரின் மனதிலும் சமத்துவ உணர்வை உருவாக்கத் தவறிவிட்டோம். படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் சாதி சார்ந்த மனநிலை உள்ளது. 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டம் கடுமையாக இருந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல்துறையும் நீதித்துறையும் மெத்தனமாகச் செயல்படுவதால், இதுபோன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர்," என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!