எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட ’சித்தா' பட இயக்குனர்.. குவிந்த பிரபலங்கள்!

 
இயக்குனர் அருண்குமார்

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.யு. அருண்குமார். இதைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ மற்றும் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில், சேதுபதியின் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு சித்தார்த்தை வைத்து ‘சித்தா’ படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது விக்ரமை வைத்து ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மார்ச் 27 ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இன்று (பிப்ரவரி 02) மதுரையில் திருமணம் செய்து கொண்டார். விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web