வியக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்... தன்னை மோதிய காரை கண்டுபிடித்து துணையுடன் வந்து பழிவாங்கிய நாய்… !

 
நாய்


மனிதனை விலங்குகள் மிகச்சரியாக அடையாளம் காண்பதில் திறமை வாய்ந்தவை.இதனை பல நேரங்களில் விலங்குகள் உறுதி செய்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.அப்படி ஒரு சம்பவம் தான்  மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் வசித்து வருபவர் பிரக்லாத் சிங் கோஷி .

இவர்  சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்ற போது திடீரென  ஒரு நாய் மீது அவருடைய கார் மோதியது. இதை பார்த்த அந்த நாய் சிறிது தூரம் அவரை துரத்திய நிலையில் பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் திருமண விழாவிற்கு சென்று விட்டு நள்ளிரவு அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிற்கு அடுத்த நாள்   காலை அவர் தன்னுடைய காரை பார்த்தபோது அதில் ஏராளமான கீறல்கள் இருப்பது தெரியவந்தது.

வெறி நாய் 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் மீது மோதிய நாய் மற்றொரு நாயுடன் வந்து நள்ளிரவு நேரத்தில் அந்த காரில் நகங்களால் கீறிவிட்டு சென்றதை அறியமுடிந்தது.  இதனை  சரி செய்வதற்கு அவர் ரூ 15000 வரை செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இதற்கான காரணத்தையும் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது   சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web