’இனி ட்ரைவருக்கு வேலையில்லை’.. வந்தது புது மாடல் ரோபோ கார்.. எலான் மஸ்க்கின் அடுத்த படைப்பு!
அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது டெஸ்லாவின் ரோபோ கார். காரைப் பார்த்த பிறகு, ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று ஆசை வரும். காரணம், காருக்கு டிரைவர் தேவை இல்லை, டென்ஷன் இல்லை, ஏறி உட்கார்ந்தால் போதும், இந்த ரோபோ டாக்ஸி நாம் சொல்லும் இடத்திற்கு விரைந்து செல்லும். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இந்த ரோபோ காரின் முன்மாதிரியை சமீபத்திய நிகழ்வில் வெளியிட்டார். டெஸ்லா உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக அறியப்பட்டாலும், மஸ்க் அதை ஒரு ரோபோட்டிக்ஸ் நிறுவனமாக மாற்ற விரும்புகிறார்.
அதனால் தான் டெஸ்லா நிறுவனம் தாங்கள் உருவாக்கி வரும் மின்சார கார்களின் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. தானாக இயங்கக்கூடிய மற்றும் 20 பேர் பயணிக்கக் கூடிய ரோபோவன் என்ற அறிவிப்பையும் மஸ்க் அறிமுகம் செய்து கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஓரளவு தானியங்கி தொழில்நுட்பத்துடன் விற்பனையில் உள்ள டெஸ்லா கார்கள் குறித்து பல புகார்கள் உள்ளன. ரோபோ டாக்ஸி மூலம் அதிக விபத்து ஏற்படுவதாக வெளியான செய்திகளை அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது. இந்நிலையில், முழுமையாக தானியங்கி டெஸ்லா ரோபோ டாக்சிகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் இந்த வகை கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை எதிர்பார்க்கலாம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!