போதைப்பொருள் விவகாரம்.. 4 கல்லூரிக்கு சீல் வைங்க.. அப்போ தான் திருந்துவாங்க.. மோகன்ஜி காட்டம்!

 
இயக்குநர் மோகன்ஜி

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காடாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாத்திரைகள் மற்றும் போதை பொருட்களை வைத்திருந்த 30 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

இத்தகவலை இயக்குநர் மோகன்ஜி பகிர்ந்துள்ளார். இதைப் பற்றி படம் எடுத்தால் கிண்டல் செய்வார்கள், இப்போது பாருங்கள் உண்மை அம்பலமானது என்று  ட்வீட் போட்டுள்ளார். பழைய வண்ணார்பேட்டை படத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.  இயக்கிய திரெளபதி நாடக காதலுக்கு எதிரான படமாக உருவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் நடித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது சாதிப் படம் என்றும் முத்திரை குத்தப்பட்டது. அந்த படத்தை தொடர்ந்து மோகன் ஜி ருத்ர தாண்டவம். இயக்கினார்

ருத்ர தாண்டவத்தை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த பகாசூரன் திரைப்படம் கல்லூரி கோமாளித்தனங்கள் மற்றும் சில ஆசிரியர்கள் பெண்களை வழிதவறச் செய்யும் காட்சிகளைக் காட்டியதால் நிறைய விவாதங்களைத் தூண்டியது. இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் போதைப் பொருள் புழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் மோகன் ஜி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், “இதுபோல பல கல்லூரி விடுதிகளில் நடக்கும் அநியாயத்தை திரையில் சொன்னால், பிற்போக்குத்தனம் என்றும், பெண்கள் படிக்கக்கூடாது என்று  , மோகன்ஜி  சொல்றான்னு உருட்டனவன் எல்லோரும் இப்போ வாய் திறப்பார்களா? இதுல ஜாதி முத்திரை வேற்.. நாலு கல்லூரிகளுக்கு சீல் வைங்க.. அப்போ தான் இந்தக் கல்வி தந்தை திருந்துவார்கள்..” என்று கோபத்தைக் கொட்டியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web