பகீர்... கத்தை கத்தையாக சாக்கு பைகளில் அடைத்து ஓடையில் வீசப்பட்ட தேர்தல் ஆணைய படிவங்கள்...!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் கரட்டுமலை அருகே உள்ள கண்மாய் பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் மூன்று சாக்குப்பைகளில் கத்தை கத்தையாக பேப்பர் கட்டுகள் தண்ணீரில் வீசப்பட்டுள்ளது. வெளியூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் மிதந்து சென்ற அந்த படிவங்களைஎடுத்து பார்த்ததில்அதிர்ச்சி அடைந்தனர்.
அவை தேர்தல் ஆணைய படிவம் 6- பி எனவும், இந்திய தேர்தல் ஆணையம் எனவும் வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் சான்றுரைத்தல் எனவும் அச்சிடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அதில் ஏராளமான படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இருந்தன. அதில் சில படிவங்களின் முகவரி, கோவில்பட்டி பகுதியாக இருந்தது. இதனை ஓடையில் வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என உடனடியாக தெரியவில்லை.
சாக்கு பைகளில் அரசின் படிவங்களை கொண்டு வந்து ஓடையில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. இதை அறிந்து சென்ற கழுகுமலை தலையாரி மணி நேற்று அந்த பகுதியில் உள்ள ஓடையில் இறங்கி தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்த படிவங்களை சேகரித்தார். பின்னர் அவற்றை கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது.
இது குறித்து கோவில்பட்டி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் உமா கழுகுமலை அருகே உள்ள கரட்டுமலை கண்மாய் பகுதியில் உள்ள ஓடையில் வீசி சென்ற தேர்தல் ஆணைய படிவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் இருந்த சில பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கழுகுமலை பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்கு சாவடி முகவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரசின் ஆவணங்களை அலட்சியமாக வீசியவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!