அதிர்ச்சி... கோவில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு... அலறியடித்து ஓடிய பக்தர்கள்!​​

 
காசி விஸ்வநாதர்

தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோவிலில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகப்பிரசித்தி  பெற்ற கோவில் தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோவில்.  இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்திருந்த பொழுது கோவில் நுழைவாயில் பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்து விட்டு அங்கிருந்து ஓடியதை கண்டு பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காசி விஸ்வநாதர்

 இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. பக்தர்களும்,  கோவில் பணியாளர்களும் இணைந்து  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடந்து வரும் நிலையில் அதற்காக வைக்கப்பட்டிருந்த சாரத்தின் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ்

உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் தீ வைத்த நபரை பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடையம் பகுதியில் வசித்து வரும்  பாலன் என்பது தெரிய வந்துள்ளது. எதற்காக தீ வைத்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web