பொய்யான வழக்கை சித்தரித்து இளைஞரை சிக்க வைத்த குடும்பம்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

 
சென்னை உயர்நீதிமன்றம்

2018 ஆம் ஆண்டு கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், "எங்கள் மூத்த மகளை காதலிப்பதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் எங்கள் இளைய மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். அது தொடர்பான சில புகைப்படங்களையும் காட்டி, என் மகளை பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்" என்று பெற்றோர் புகார் அளித்திருந்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் குமார் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இளைய பெருமாள் ஆஜராகி, "குமார் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும்  சிறுமியின் மூத்த சகோதரியைக் காதலித்து வந்தார். இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சு எழுந்தது. குமார் இந்தத் திருமணத்திற்குத் தடையாக இருப்பார் என்று நினைத்து, பெற்றோர் குமார் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்துள்ளனர். அரசு தரப்பு மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, "விசாரணையின் போது சாட்சிகளின் வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உடலில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்த நீதிபதி, குமாருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஏதேனும் இருந்தால், அதைத் திருப்பித் தருமாறும், வழக்கை முடித்து வைப்பதாகவும் உத்தரவிட்டார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web