செம்பருத்தி சீரியலில் நடித்த பிரபல நடிகை விலகல்.!

 
செம்பருத்தி சீரியலில் நடித்த பிரபல நடிகை விலகல்.!


தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க வைப்பதில் சீரியல்களின் பங்கு மிக முக்கியமானது. இதில் தமிழ் சேனல்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முன்னணியில் இருப்பது ஜீ தமிழ் சேனல். இதில் 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் செம்பருத்தி. தமிழ் டிவி சேனல்களில் தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

செம்பருத்தி சீரியலில் நடித்த பிரபல நடிகை விலகல்.!

ஆனால் சில நாட்களாக டிஆர்பியில் இருந்து விலகி டல் அடித்து கொண்டிருந்தது. கிராமத்தில் இருந்து வந்து பணக்கார வீடு ஒன்றில் வேலைக்கார பெண்ணாக சேர்ந்து பின் அந்த வீட்டிற்கே மருமகளாகும் பெண்ணை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களும், நிகழ்வுகளும் தான் இந்த சீரியல்.


இந்த சீரியலில் முதலில் ஹீரோவாக நடித்தவர் கார்த்திக் ராஜ் . கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். திடீரென கார்த்திக் சீரியலில் இருந்து நீக்கப்பட்டு, யூடியூப் புகழ் விஜே அக்னி ஹீரோவாக மாற்றம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் கதையிலும் சில சொதப்பல்கள் காரணமாக செம்பருத்தி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது கங்கா கேரக்டரில் ஐஸ்வர்யாவின் தாயாக நடித்த நடிகை ராணி, செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் இனி நடிகை உஷா எலிசபெத் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web