மகனின் காதலியுடன் தந்தை திருமணம்... அதிர்ச்சியில் மகன் எடுத்த விபரீத முடிவு!

 
மகாராஷ்டிரா இளைஞன்

தான்  உயிருக்கு உயிராய் காதலித்து வந்த காதலியும் தனக்கு உண்மையாக இல்லை... மருமகளாக வரப் போகிறவள் என்று தனது தந்தையின் தன் மீது பாசமாக இல்லாமல் தனது காதலியைத் திருமணம் செய்துக் கொண்டார் என்று அதிர்ச்சியில் உறைந்த மகன் எடுத்த முடிவு நாசிக் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரின் சிட்கோ பகுதியில் ஒரு இளைஞன் தனது தந்தையுடன் வசிக்கிறார். அந்த இளைஞன் திருமண வயதை அடைந்ததும், அவனது தந்தை அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி வந்தார். அதில், அவனது மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததால், நிச்சயதார்த்தம் முடிந்து, திருமண ஏற்பாடுகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

5வது திருமணம்

அந்த நேரத்தில், தந்தையும் தனது மகன் காதலித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணும் தனது வருங்கால மாமனாரை காதலிக்க துவங்கிய நிலையில், மகனின் காதலியுடன் அந்த கிராமத்தை விட்டு ஓடிப்போய் தந்தை திருமணமும் செய்து கொண்டார்.

தனக்கு மனைவியாக வேண்டும் என்று விரும்பிய பெண், தனக்கு சித்தியாகக் மாறி மாலையும் கழுத்துமாக தந்தையுடன் வந்ததைக் கண்டு அந்த இளைஞன் அதிர்ச்சியடைந்தான். இதனால் விரக்தியடைந்த இளைஞரை குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆண், சோகம்

ஆனால், தனது தந்தை மற்றும் வருங்கால மனைவியின் துரோகத்தால் வாழ்க்கையை வெறுத்த இளைஞன், இனி திருமணம் செய்து கொள்ளவோ ​​அல்லது யாருடனும் இருக்கவோ மாட்டேன் என்று கூறி சாலையோரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதேபோல் சீனாவில், பிரபல வங்கியின் முன்னாள் தலைவர் லியு லியாங், தனது மகன் காதலித்த பெண்ணை விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து கவர்ந்திழுத்து திருமணம் செய்து கொண்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை! 

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web