பணம் இரட்டிப்பாகும் என கூறி நடந்த மோசடி.. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றிய கும்பல் கைது!

 
அம்மாபேட்டை மோசடி

சேலத்தில், உரிய அங்கீகாரம் இல்லாமல் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதநேய அறக்கட்டளையின் தலைவர்கள் விஜயபானு, ஜெயபிரதா மற்றும் பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி மற்றும் 1000 மூட்டை அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும், அன்னை தெரசா மகளிர் அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர். சேலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அனுமதியின்றி முதலீட்டை வசூலிக்கும் போது, ​​மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.அன்னை தெரசா அறக்கட்டளையில் முதலீடு செய்தால், உங்கள் பணம் 7 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று கூறி பணம் வசூலித்துள்ளனர்.

7 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். முதலீடு செய்பவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்குவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்துள்ளனர். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் முதலீடு செய்ய குவிந்துள்ளனர்.

கைது

சேலம் அம்மாபேட்டை பகுதியில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். நேற்று முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்தபோது, ​​அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடுத்த பணத்திற்கு ரசீது கூட எதுவும் கொடுக்காமல் பணம் வசூலித்தது தெரியவந்ததால், போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web