சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்.. தட்டி தூக்கிய போலீஸ்.. கட்டு கட்டாக சிக்கிய பணம்!
ஆந்திர மாநிலம் ஏலூர் நகர் பகுதியில் உள்ள தங்கெல்லமுடி பகுதியில் கும்பல் ஒன்று சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தினமான நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பதுரி நிலையம் என்ற பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஆய்வு செய்தனர். அங்கு போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பலில் பலர் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு சூதாட்ட கும்பலை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கும்பலிடம் இருந்து ரூ.8.10 லட்சம் ரொக்கம், 25 ஸ்மார்ட்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சட்டவிரோத சூதாட்டத்தை நடத்தி வந்த பில்லா வெங்கடேஷ் மற்றும் மற்றொரு முக்கிய குற்றவாளியும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சூதாட்டம் குறித்தும், அதன் பின்னணியில் உள்ள விவரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!