விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60வயது முதியவர் போக்சோவில் கைது!

 
போக்சோ

சென்னை அம்பத்தூர் அடுத்த வில்லிவாக்கம் நேரு நகரில் வசிப்பவர் சிதம்பரம் (60). இவர் தினக்கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் முதியவர் சிதம்பரத்தை பிடித்து சரமாரியாக அடித்தனர்.

பின்னர் முதியவரை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று காலை சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web