பெண்ணின் திருமண வயது 14 இல்லை.. இனி 18.. போராடி வெற்றி கண்ட எம்.பிக்கள்!

 
கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நோக்கில் புதிய மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலம்பியாவில் பெண் குழந்தைகளுக்கு 14 வயது முதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


2023ல் பாராளுமன்றத்தில் இதற்கு எதிராக ஒரு மசோதா முன்மொழியப்பட்டது. மேலும், அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் நாட்டில் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கொலம்பிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த மசோதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கையெழுத்திட்டதை அடுத்து இந்த மசோதா சட்டமானது. இதன் மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சட்டமாக்க போராடிய  எம்.பிக்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web