குப்பை கூளமாக கிடந்தது அரசு பேருந்து.. மனசு கேட்காமல் சுத்தம் செய்த மாஞ்சோலை தமிழரசி!

 
தமிழரசி

குப்பைகள் நிறைந்த மாஞ்சோலை அரசுப் பேருந்தை பெண் பயணி ஒருவர் சுத்தம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊத்து பகுதியில் இருந்து அம்பைக்கு வழக்கம் போல் பேருந்து பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் காக்காச்சி வழியாக மாஞ்சோலைக்கு அதிகாலை 4:00 மணிக்கு வந்தது.



அந்த பஸ்சில் சில பயணிகள் பயணம் செய்தனர். மாஞ்சோலை என்ற இடத்தில் டீ குடிப்பதற்காக டிரைவர் பஸ்சை சிறிது நேரம் நிறுத்தினார். மாஞ்சோலையில் இருந்து பயணிகள் பஸ்சில் ஏறினர். பேருந்து குப்பைகள் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதை பார்த்த மாஞ்சோலையை சேர்ந்த தமிழரசி என்ற பெண் பயணி பஸ்சில் இருந்த குப்பையை கொண்டு வந்த துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.

நீண்ட நாட்களாக அவர்களை காக்கும் பேருந்து குப்பை குவியலில் கிடப்பதை பார்த்து பொறுக்க முடியாமல் தமிழரசி சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web