திருமணத்தில் நடனமாடிய மணமகன்.. ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை!

திருமணங்களில் நடைபெறும் நடனப் பாடல் நிகழ்வின் போது, மணமக்கள் தங்கள் நண்பர்களுடன் நடனமாடுகிறார்கள். இந்த நிகழ்வால் டெல்லியில் ஒரு திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. டெல்லியில் ஒரு ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது, அதற்கான வரவேற்பும் நடைபெற்றது.
அந்த நேரத்தில், மேடையில் நின்றிருந்த மணமகனை அவரது நண்பர்கள் 'சோலி கே பீச் கியா ஹை' பாடலுக்கு நடனமாட கட்டாயப்படுத்தினர். அவரும் அவரது நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி நடனமாடினார். இந்த செயல் மணமகளின் தந்தையை எரிச்சலடையச் செய்தது. இதனால் கோபமடைந்த அவர் திருமணத்தை ரத்து செய்தார். "மணமகனின் இந்த செயல் என் குடும்பத்தின் மரியாதைக்கு அவமானம்" என்று கூறி, தனது மகளை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
இது குறித்து மணமகன் எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடன் வந்த மணமகளும் கண்ணீருடன் வெளியேறினார். மணமகன் தனது நண்பர்களுடன் நடனமாடியதால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பல பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!