மணப்பெண் பேசிய பேச்சால் முதலிரவை விட்டு தெறித்து ஓடிய மணமகன்.. ஷாக் பின்னணி!
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இனிதாக நடந்தது. இதையடுத்து இந்த ஜோடிக்கு முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்தன. மணமகன் பல விருப்பங்களுடன் முதல் இரவு அறைக்குள் சென்றார். அப்போது மணமக்கள் இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது மணமகள் தனது கணவரிடம் கேட்டதை பார்த்து மணமகன் அதிர்ச்சி அடைந்தார். ஆம், மணப்பெண் கணவரிடம் பீர், கஞ்சா மற்றும் மட்டன் கேட்டுள்ளார். ஆசைகளோடு முதலிரவில் சென்ற மாப்பிள்ளையின் ஆசைகள் அனைத்தும் தகர்ந்தது. பின்னர், மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, திருமணத்திற்கு முன்பு பீர், கஞ்சா குடிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மணமகன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் திருமணமான முதல் இரவில் மணமகள் செய்த காரியத்தால் மணமகன் விவாகரத்து செய்யப் போகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!