அட... வைரல் வீடியோ... தன் திருமணத்தில் தானே வேத மந்திரங்களை ஓதி திருமணம் செய்யும் மணமகன்…!

பொதுவாக திருமண விழாக்களில் அர்ச்சகர்கள் மந்திரம் ஓத மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். ஆனால் சில திருமணங்களில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
Groom Becomes Priest: #Saharanpur Man Conducts His Own Wedding Rituals pic.twitter.com/keHAABXD77
— Genzdigest (@Genzofficia_l) January 25, 2025
அதன்படி திருமணத்தில் மணமகனே அர்ச்சகராக மாறி வேத மந்திரங்களை ஓதியுள்ளார். ஹரித்துவார் பகுதியில் வசித்து வருபவர் விவேக்குமார் . விவேக் முதலில் ஊர்வலமாக வந்து திருமணத்தில் கலந்து கொள்கிறார். அவர் மணமேடைக்கு வந்த பிறகு திருமண சடங்குகளை செய்ய ஆரம்பித்து விடுகிறார்.
தன்னுடைய திருமணத்தில் மணமகள் அருகில் இருக்கும் போது வேத மந்திரங்களை ஓதி சடங்குகளை செய்கிறார். அதாவது விவேக் 12ம் வகுப்பு முடித்த பிறகு வேத படிப்பை படித்துள்ளார். அதனால் தான் தன்னுடைய திருமணத்தில் அவரே மந்திரங்களை ஓதுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!