நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் வந்த ரவுடி.. அதிர்ச்சியில் காவல்துறையினர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொளதாசபுரம் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடை அருகே செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு ஒரு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாகலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கர்நாடகாவின் சூலகுண்டா காலனியைச் சேர்ந்த ரேவந்த்குமார் (26) கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இந்தக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கர்நாடகாவைச் சேர்ந்த ரேவண்ணா (எ) ரோஹித்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்து விசாரித்ததில், விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான தகராறில் அவர் ரேவந்த்குமாரைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கொலையில் ஈடுபட்ட ரேவண்ணா (எ) ரோஹித்குமார் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான ரேவண்ணாவும் அவரது கூட்டாளிகளும் ஜாமீனில் வெளியே வந்தனர், அதே நேரத்தில் ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட ரேவண்ணா காரில் வந்தார். பின்னர் பாதுகாப்புக்காக அவருடன் மற்றொரு கார் வந்தது. இந்த கார் ஓசூர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தவுடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகலூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் காரை சோதனை செய்தபோது, காரில் 5 கைத்துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கி மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த விசாரணையில், ரேவந்த் குமாரின் குடும்பத்தினர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பார்கள் என்ற அச்சத்தில், ஓசூர் நீதிமன்றத்தில் ரேவண்ணா கையெழுத்திட வந்தபோது, அவரது பாதுகாப்புக்காக கர்நாடகாவிலிருந்து ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அழைத்து வந்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 5 கைத்துப்பாக்கிகளுடன் வந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடர்கின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!