காரை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம ஆசாமிகள்.. பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி உயிரிழந்த சோகம்!

பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா, நேற்று (ஜனவரி 24) மாலை ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரேன்கர் பகுதியில் தனது நண்பர்களான புனித் மற்றும் குகலுடன் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு ஆசாமிகள் காரில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில், ஹர்பிலாஸ் மற்றும் புனித் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பலத்த காயமடைந்த புனித் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!